ஆப்நகரம்

புகார்களிலிருந்து மோடி, அமித் ஷாவை விடுவிக்க ஒரு தேர்தல் ஆணையர் எதிர்ப்பு

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை, தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களிலிருந்து விடுவிக்க தேர்தல் ஆணையர் ஒருவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த கூடாது என்ற விதி இருந்தும், பாலகோட் தாக்குதலை மேற்கோள்காட்டி, முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

Samayam Tamil 4 May 2019, 5:16 pm
பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை, தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களிலிருந்து விடுவிக்க தேர்தல் ஆணையர் ஒருவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil modi amit


மகாராஷ்டிராவில் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, வயநாட்டில் ராகுல் காந்தி களமிறங்கியது பற்றி விமர்சித்தார். ராணுவ நடவடிக்கைகளை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த கூடாது என்ற விதி இருந்தும், பாலகோட் தாக்குதலை மேற்கோள்காட்டி, முதல்தலைமுறை வாக்காளர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோன்று, அமித் ஷாவும் சில இடங்களில், தேர்தல் விதிகளை மீறி பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இவ்வாறு 7 புகார் மனுக்கள் மீது, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு, முடிவெடுத்தது.

இதில், 5 தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களிலிருந்து, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவை விடுவிக்க, ஒருமனதாக முடிவெடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு, குழுவில் இருந்த மூன்று பேரில் ஒருவர், பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் விடுவிக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி