ஆப்நகரம்

தினகரனுக்கு மறுக்கப்பட்ட குக்கா்: நிா்மலாதேவியின் வழக்கறிஞருக்கு ஒதுக்கீடு

டிடிவி தினகரன் குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில் தற்போது அந்த சின்னத்தை பேராசிரியை நிா்மலாதேவியின் வழக்கறிஞா் பசும்பொன் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Mar 2019, 5:56 pm
குக்கா் சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்க வேண்டாம் என்று டிடிவி தினகரன் தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது அந்த சின்னம் பேராசிரியை நிா்மலாதேவியின் வழக்கறிஞா் பசும்பொன் பாண்டியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Pasumpon Pandian 1


ஆா்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கப்பட்டது. அவா் அந்த தொகுதியில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை பெற்றாா். இதனைத் தொடா்ந்து இரட்டை இலை, உதய சூரியன் சின்னத்திற்கு அடுத்தப்படியாக, குக்கா் சின்னம் பிரபலம் பெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் தனக்கு குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். ஆனால், அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கீடு செய்ய இயலாது என்று தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தொிவித்தது.


மேலும் குக்கா் சின்னம் தனக்கு ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் அதனை சுயேட்சைகளுக்கு ஒதுக்க வேண்டாம் என்று தினகரன் தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தாா். ஆனால் தினகரனின் கோாிக்கையை ஏற்காத தோ்தல் ஆணையம் சுயேட்சைகளுக்கு குக்கா் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பேராசிரியை நிா்மலாதேவியின் வழக்கறிஞா் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி