ஆப்நகரம்

Election Commission: விவிபாட் ஒப்புகைச் சீட்டு விவகாரம்- 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு!

நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் தொடர்பான கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

Samayam Tamil 22 May 2019, 2:26 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நிறைவு பெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாஜகவிற்கு ஆதரவாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
Samayam Tamil Election-commission


இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். அதாவது, நாளை வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு, விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டு எண்ணப்பட வேண்டும்.

இரண்டின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை எனில், அந்த தொகுதியின் அனைத்து விவிபாட்களில் உள்ள ஒப்புகைச் சீட்டையும் எண்ண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்நிலையில் விவிபாட் சீட்டு எண்ணிக்கை குறித்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

வாக்கு எண்ணிக்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முதலில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு விதமான எண்ணிக்கையிலும் வித்தியாசம் இருந்தால் 100% ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரித்துள்ளது.

அடுத்த செய்தி