ஆப்நகரம்

”ஹீலிங் டச்” தமிழக ஐஏஎஸ் அதிகாரி இவர் தான்; தேர்தல் பணியில் இருந்து துரத்திவிட்ட ம.பி.,!

தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை, மத்திய பிரதேச தேர்தல் ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 23 Apr 2019, 8:23 pm
டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி உமா சங்கர் 1990 பேட்சை சேர்ந்தவர். இவர் ஹீலிங் மூலம் நம்பிக்கை அடிப்படையில் பிறரின் வலிகளை குணப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பலமுறை எச்சரித்தும், அவர் நிறுத்திய பாடில்லை. ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தின் சிதி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Samayam Tamil Uma Shankar IAS


எனவே அந்தப் பொறுப்பில் இருந்து உமா சங்கர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு பதிலாக சந்த்ராகர் பாரதி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உமா சங்கர் நீக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அவரது இல்லத்திற்கு முன்பு ஹீலிங் சிகிச்சைக்காக பலரும் கூடியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒருவாரமாகவே ஏராளமான பொதுமக்கள் உமா சங்கரை தேடிச் சென்று, ஹீலிங் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உமா சங்கரின் நீக்கம் குறித்து, மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தாராவ் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், சிதி மாவட்டத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்தது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இதுபற்றி உமா சங்கரின் கேட்கையில், நீக்கம் குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என்று தெரிவித்தார்.

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள், தேர்தல் சம்பந்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பது விதியாகும். அதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

யார் இந்த உமா சங்கர்:

இந்து தலித்தாக பிறந்த உமா சங்கர், பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதாவது, அரசியல்வாதிகளிடம் போராடி, போராடி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். தமிழகத்தில் மதப்பிரச்சார விவகாரங்களில் ஈடுபட்டு, அடிக்கடி செய்திகளில் வந்து செல்வார். கடந்த 2015ஆம் ஆண்டு, உமா சங்கரின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பிரச்சாரப்படுத்த தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

ஏனெனில் அரசு ஊழியர்கள் மதச்சார்புள்ள விஷயங்களில் வெளிப்படையாக ஈடுபடக்கூடாது என்பது விதியாகும். இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி, தேர்தல் பார்வையாளராக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சிதி மாவட்ட மருத்துவமனையில் ஹீலிங் டச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவர் கரே கூறுகையில், கடந்த வாரம் ஐஏஎஸ் அதிகாரி சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு தலைவலி இருந்தது. அப்போது வேறு சில நோயாளிகளும் இருந்துள்ளனர். அவர்களுக்கு அருள் பாலித்து, நம்பிக்கை மூலம் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். 3 நோயாளிகளுக்கு அவ்வாறு செய்ததை அடுத்து, அவரைத் தடுத்து ஓய்வெடுக்கக் கூறினோம். அதன்பின்னர் பலரும் அவரைத் தேடி வரத் தொடங்கினர் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி