ஆப்நகரம்

எதுக்குபா இவ்வளவு நாளா தேர்தலை நடத்துறீங்க - நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி!

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலை, இவ்வளவு நாட்கள் நடத்தக் கூடாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 May 2019, 9:22 am
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களாக நடைபெற்று, இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 7வது கட்டமாக 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil Nitish_Kumar_PTI


அதில் பீகார்(8), ஜார்க்கண்ட்(3), மத்தியப் பிரதேசம்(8), பஞ்சாப்(13), மேற்கு வங்கம்(9), சண்டிகர்(1), உத்தரப் பிரதேசம்(13), ஹிமாச்சல்(4) ஆகிய தொகுதிகள் அடங்கும்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாடு மிகவும் பெரியது. இதற்கு தேர்தலை நடத்துவது மிகப்பெரிய விஷயம். இருப்பினும் விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் இவ்வளவு இடைவெளி தேவையில்லை.

இது கோடைக் காலத்தில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. எனவே நீண்ட நாட்களாக தேர்தலை நடத்தக்கூடாது. இதுகுறித்து அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி