ஆப்நகரம்

ஜோராக நடக்கும் தேர்தல் பண விநியோகம்; செயல்படுவது எப்படி?

வருமான வரித்துறை, பறக்கும் படை, மற்ற ஏஜென்சிகள் தேர்தலின்போதான பண விநியோகத்தைத் தடுக்க முயன்று வருகின்றன. லாரி டயர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என பலவித வழிகளில் பணம் கடத்தப்படுகிறது.

Samayam Tamil 3 Apr 2019, 3:45 pm
வருமான வரித்துறை, பறக்கும் படை, மற்ற ஏஜென்சிகள் தேர்தலின்போதான பண விநியோகத்தைத் தடுக்க முயன்று வருகின்றன. லாரி டயர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என பலவித வழிகளில் பணம் கடத்தப்படுகிறது.
Samayam Tamil money


தேர்தல் அறிவிக்கும் முன்னரே பணம் தமிழகத்துக்கு பூத் ஏஜெண்டுகளிடம் வந்து சேர்ந்துவிட்டதாக ஒரு கட்சியின் உறுப்பினர் கூறியுள்ளார்.

பொதுவாக அனைத்து கட்சிகளின் பூத் ஏஜெண்ட்களும் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு நன்கு பரிச்சையமானவர்களாகவே இருப்பர்.

நள்ளிரவுக்குப் பின்னர் வீடு வீடாகச் சென்று வாக்குக்கு 500 முதல் 2000 ரூபாய்வரை பணம் விநியோகிக்கப்படும்.

ஒரு கட்சி முதலில் பணத்தை விநியோகிக்கிறது என்றால் மற்றொரு கட்சி அவர்கள் விநியோகம் முடியும்வரை காத்திருப்பர். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் பணத்தை ஷிப்ட் போட்டு விநியோகிக்குமாம்!

ஏப்., 18 தேர்தல் தேதிக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீடுகளுக்கு பணத்தை விநியோகிக்க கட்சிகள் போட்டியிட்டு களத்தில் வேலைசெய்துகொண்டு இருக்கின்றன.
பணத்தை எடுத்துச் செல்பவர் பறக்கும் படையிடம் அகப்பட்டால், கட்சியின் பெயரோ அதன் தலைவரின் பெயரோ வெளியே வராது.

பண விநியோகம் என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த திட்டத்தில் எங்கும் குறை காண முடியாது. இதற்காக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப செயல்படுத்தப்படும்.

பணம் ஏஜெண்டிடம் வந்தவுடன் சந்தேகம் ஏற்படாத இடத்தில் பதுக்கி வைக்கப்படும். அவ்வப்போது தேவைக்கேற்ப சிறு தொகை அதிலிருந்து எடுத்து விநியோகிக்கப்படும். பாதுகாப்பு கருதி பெரிய தொகையை பெரும்பாலும் ஒரு ஏஜெண்ட் கையில் எடுத்துச் செல்ல மாட்டார். கட்சி உறுப்பினர்களிடம் சிறு சிறு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் எவ்வளவு முயன்றாலும் இதனை கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினம். வாக்காளர்களாகிய நாம் திருந்தி நேர்மை தவறாமல் வாக்களிக்கும் வரை அரசியல் கட்சிகளின் பண விநியோகம் தேசம் முழுவதும் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி