ஆப்நகரம்

பொள்ளாச்சியில் பிரச்சாரம் செய்ய கி.வீரமணிக்கு அனுமதி மறுப்பு

கிருஷ்ணரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.

Samayam Tamil 10 Apr 2019, 9:05 am
பொள்ளாச்சியில் பிரச்சாரம் செய்ய கி.வீரமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது . பொள்ளாச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.
Samayam Tamil veeramani-GDM2CE1FU3jpgjpg


இந்நிலையில் கிருஷ்ணரை இழிவுபடுத்தி பேசியதாக கூறி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.

பொள்ளாச்சியில் முன்னதாக 300 பெண்கள் பேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாகிய வீடியோ தமிழகம் முழுக்க பலத்த அதிர்வலையை உண்டாக்கியது. இதனால் பெண்கள் வீதியில் நடமாட அஞ்சினர். இச்சம்பவம் குறித்து வீரமணி கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பகவான் கிருஷ்ணரை மேற்கோள் காட்டிய அவர், கிருஷ்ணர் இதுபோலவே அந்த காலத்தில் பெண்களிடம் லீலைகள் புரிந்தார் என கூறினார். இதனை எதிர்த்து பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தொடர்ந்து இந்து மத கடவுளர்களை இழிவுபடுத்துவதையே வீரமணி வேலையாகக் கொண்டுள்ளார் என குற்றச் சாட்டுகள் எழுந்தன.

தற்போது பொள்ளாச்சி பகுதியில் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடை விதித்தனர்.

அடுத்த செய்தி