ஆப்நகரம்

கமல் சினிமா நடிப்பை மக்களிடமும் காட்டுகிறார்: ராஜேந்திர பாலாஜி

கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கலாம், மக்களிடத்தில் நடிப்பதால்தான் வெறுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 5:36 pm
சினிமாவில் நடிக்கும் கமல்ஹாசன் மக்களிடம் நடிப்பதால்தான் அவரை வெறுக்கிறோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 201810161357048733_TN-Minister-Rajendra-balaji-slams-kamal-haasan-party_SECVPF


மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கோவையில் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் என பலரை குறிப்பாக தாக்கிப் பேசினார். அப்போது, நான் நடிகர்தான், நேர்மையாக இருக்கத்தெரிந்த நடிகன் எனக் கூறினார்.

இந்நிலையில், கமலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் சினிமாவில் நடிக்கலாம், மக்களிடத்தில் நடிப்பதால்தான் வெறுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி