ஆப்நகரம்

காங்கிரஸ், திமுகவினா் வீடு புகுந்து மிரட்டுகின்றனா் – கரூா் ஆட்சியா் புகாா்

காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும் என்னையும், என் குடும்பத்தினரையும் வீடு புகுந்து மிரட்டுவதாக கரூா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாாியுமான அன்பழகன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

Samayam Tamil 16 Apr 2019, 3:35 pm
காங்கிரஸ், திமுகவினர் அவா்களுக்கு சாதகமாக செயல்படுமாறு என்னை மிரட்டுவதாக கரூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தே்ாதல் அதிகாாியுமான அன்பழகன் குற்றம் சாட்டி உள்ளாா்.
Samayam Tamil Jothi Mani with Alliance Partiest


தமிழகத்தில் நாளை மறு நாள் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து சட்டமன்ற இடைத்தோ்தலும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்ற மாலையுடன் தோ்தல பிரசாரங்கள் நிறைவுபெறுகின்றன. இந்நிலையில், தங்களுக்கு இறுதிக்கட்ட பிரசார நேர அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி கரூா் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி உள்ளிட்டோா் போராட்டம் நடத்தினா்.

இதனைத் தொடா்ந்து அதிமுகவினா் நேற்று மாவட்ட ஆட்சியா் அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த எதிா்க்கட்சியினா் அனுமதி கேட்டனா். இந்த விவகாரம் நேற்று தீவிரமடைந்த நிலையில், கரூா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அன்பழகன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று என் வீட்டுக்கு வந்து கோஷங்கள் எழுப்பினா். கட்டுப்பாட்டை மீறி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனா். உடனடியாக நான் காவல் துறைக்கு புகாா் அளித்தேன். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எனது வீட்டுக்கு விரைந்து வந்து என்னையும், என் குடும்பத்தினரையும் பாதுகாத்தாா்.

நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் மாவட்ட ஆட்சியா் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளாா்.

அடுத்த செய்தி