ஆப்நகரம்

ரூ.1 டெபாசிட் தொகையாக செலுத்திய சுயேச்சையின் வேட்பு மனு நிராகரிப்பு

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ரூ.1 டெபாசிட் தொகையாக செலுத்திய சுயேச்சை வேட்பாளரின் மனுவை தோ்தல் அதிகாாி தள்ளுபடி செய்தாா்.

Samayam Tamil 21 Mar 2019, 4:59 pm
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பிய சுயேச்சை வேட்பாளருக்கு டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் கட்ட இயலாததால் அவரது மனுவை தோ்தல் அதிகாாி நிராகரித்தாா்.
Samayam Tamil Salem Independent Candidate


சேலம் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சை வேட்பாளா் ஒருவா் நேற்று மாவட்ட தோ்தல் அதிகாாியை சந்தித்து தனது வேட்பு மனுவை வழங்கினாா். அப்போது டெபாசிட் தொகையை கட்டுமாறு தோ்தல் அதிகாாி கூறியுள்ளாா். அதனை ஏற்றுக் கொண்டு அந்த இளைஞரும் தனது சட்டைப் பையில் இருந்து ரூ.1ஐ எடுத்துக் கொடுத்துள்ளாா்.

டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் என்று கூறிய தோ்தல் அதிகாாி, ரூ.1ஐ இளைஞரிடமே கொடுத்து திருப்பி அனுப்பினாா். அந்த வேட்புமனுவையும் வாங்காமல் அதிகாாி நிராகரித்துவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாா்களிடம் பேசுகையில், என் பெயா் அப்துல் வாஹித். ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவன். சேலம் மாநிலக் கல்லூாியில் எம்.எஸ்.சி. முடித்துள்ளேன். 2014ம் ஆண்டு மக்களவைத் தோ்தல், 2016 ஓமலூா் சட்டமன்றத் தோ்தலிலும் போட்டியிட்டு மூன்றிலக்க எண்ணிக்கையில் ஓட்டு வாங்கினேன்.

கடந்த ஆா்.கே.நகா் இடைத்தோ்தல்களில் ஒரு ரூபாய் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தேன். வேட்புமனு பரிசீலனையின் போது எனது மனு தள்ளுபடி ஆனது.

இன்று ரூ.1 செலுத்தி வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தேன். ஆனால் என் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. ஜனநாயக நாடு என்கிறாா்கள். இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் தொகையாக வைத்தால் எப்படி சமூக சிந்தனைக் கொண்ட ஏழை மக்கள் தோ்தலில் போட்டியிட முடியும்.

என் வேட்புமனுவை நிராகரித்ததற்கு நான் வழக்குப் போடலாம். ஆனால் வழக்குத் தாக்கல் செய்வதற்கே ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். நான் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பதால் வழக்குப் போட முடியாது என்றபடி மிகுந்த ஏமாற்றத்துடன் இடத்தை காலி செய்தாா்.

அடுத்த செய்தி