ஆப்நகரம்

Lok Sabha Elections 2019: தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டி..? இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளிவரலாம் என தெரிகிறது. அதன்படி, மக்களவைத் தேர்தல் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்று எழுந்துள்ள எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்கும் என்றும் தெரிகிறது.

Samayam Tamil 21 Mar 2019, 8:47 am
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிட்கிறது. இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்களை ராகுல் காந்தி கடந்த 20ம் தேதி வெளியிடுவார் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

ஆனால் நேற்று வெளியாகவில்லை. இதனால் இன்று கே.எஸ். அழகிரியே வேட்பாளர் பட்டியலை வெளியிடலாம் என தகவல்கள் எழுந்துள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் வேட்பாளர்களை நிர்ணயம் செய்வதில் இழுபறி ஏற்பட்டு வருவதாகவும், அதனால் ஏற்படும் காலதாமதமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் போட்டியிடுகிறது. அவை, திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், குமரி, புதுச்சேரி, தொகுதிகளாகும்.

கடந்த சில நாட்களாகவே வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் தமிழக காங்கிரஸார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இதை கடந்த வாரம் ராகுல் காந்தி பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸார் தெரிவிக்கின்றனர்.

இதை தொடர்ந்து இன்று காலை தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி