ஆப்நகரம்

மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால், மதுரையில் வேறு தேதியில் தேர்தல் நடத்த முடியுமா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Mar 2019, 12:26 pm
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதேசமயம் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
Samayam Tamil Madurai HC


அதில் முக்கியத்துவம் வாய்ந்த தேரோட்டம், தேர்தல் நாளான ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி திரளாக பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வர். எனவே திருவிழா நேரத்தில் பொதுமக்கள் எப்படி வாக்களிக்க வருவர் என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழலில் சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதுகுறித்து நேற்று ஆட்சியர் நடராஜன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில், ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என்று தெரிவித்தார். இதையடுத்து 2வது நாளாக ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைத்துக் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தொடரப்பட்ட வழக்கில், மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி