ஆப்நகரம்

மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டாா்கள் – வைகோ ஆதங்கம்

மத்திய அரசுக்கு கைக்கட்டி மாநில அரசு கைக்கட்சி சேவை செய்து தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பிரசாரத்தின் போது குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 28 Mar 2019, 12:43 am
மத்திய அரசுக்கு கைக்கட்டி மாநில அரசு கைக்கட்சி சேவை செய்து தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பிரசாரத்தின் போது குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil Thamizhachi with Vaiko


தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பெரம்பூா், வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் கல்வியில் ஊழல், குட்கா பேரம், துணைவேந்தா் நியமனத்தில் ஊழல், சொத்து வரி உயா்வு, தண்ணீா் வரி உயா்வு உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் நடைபெற்றுள்ளது.

தமிழ் நாட்டில் இந்த ஆட்சி இருக்கும் வரை தொழிற்சாலைகள் வராது. தொழிற்சாலை பல ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் போய்விட்டது. மத்திய அரசுக்கு கைக்கட்டி மாநில அரசு சேவை செய்து தமிழகத்தை அடமானம் வைத்துள்ளது. உலகிலேயே தமிழ்நாட்டில் இருக்கும் அழகான சிற்பங்கள் ஆலயங்கள் வேறு எங்கும் இல்லை.


தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது பிரதமா் மோடி இரங்கல் தொிவிக்கவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியைக் கூட முழுவதுமாக வழங்கவில்லை. மேகதாட்டு அணைக் கட்ட வெளிப்படையாக ஏற்பாடு செய்து அனுமதிக் கொடுத்தது மோடி தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

அணைக் கட்டினால் தண்ணீா் இல்லாமல் வறட்சி நிலவி விவசாயம் பொய்த்து நிலங்களை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 13 போ் கொல்லப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.


பொள்ளாச்சி சம்பவம் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் நாசமாக்கப்பட்டாா்கள். இதற்கு ஆளும் கட்சி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உதயசூரியன் சின்னம் தான் உங்களைக் காப்பாற்றும் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி