ஆப்நகரம்

தமிழகத்தில் ஓட்டு போட மறுக்கும் ஒரு கோடி பேர்: படித்தவர்களே அதிகம்!

தமிழகத்தில் வாக்களிக்கும் ஆர்வம் மோசமாக இருக்கும் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எதிர்வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறது.

Samayam Tamil 27 Mar 2019, 10:53 pm
20 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து ஒரு கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை.
Samayam Tamil 461575-voting


தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் தொடர்ந்து ஒரு கோடி பேருக்கு மேல் தேர்தலைப் புறக்கணித்து வருகிறார்கள் என தெரியவந்துள்ளது.

1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 1.40 கோடி பேரும், மக்களவைத் தேர்தலில் 1.32 கோடி பேரும் வாக்களிக்கவில்லை. 2001ல் சட்டப்பேரவைத் தேர்தலில் 1.94 கோடி பேர் வாக்களிக்கவில்லை. 2004 மக்களவைத் தேர்தலில் 1.85 கோடி பேர் வாக்களிக்கவில்லை.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.35 கோடி பேரும் 2011 சட்ட‌ப்பேரவைத் தேர்தலில் 1.03 கோடி பேரும் வாக்களிப்பதைப் புறக்கணித்துள்ளனர். 2014 மக்களவைத் தேர்தலில் 1.44 கோடி பேர் வாக்குப்பதிவு செய்யவில்லை.

வெளியூர் பயணம், வேலை நிமித்தமாக வெளியூர் வசிப்பது போன்றவை வாக்குப்பதிவு குறைய முதன்மையான காரணங்கள். விடுமுறையில் வேறு வேலைகளுக்காக திட்டமிட்டதாலும் உடல்நலக் குறைவாலும் வாக்களிக்க தவறுவது அடுத்த காரணங்களாக உள்ளன.

வாக்களிக்கத் தவறுபவர்களில் அதிகமானவர்கள் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வாக்களிக்கும் ஆர்வம் இப்படி மோசமாக இருக்கும் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எதிர்வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி