ஆப்நகரம்

சிதம்பரம் தொகுதியில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் - 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Apr 2019, 4:28 pm
நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil Vellore Clash


பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதேபோல் இடைத்தேர்தலில் 55.97% அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி கூறினார்.

இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி