ஆப்நகரம்

எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் யாரும் சோறு சாப்பிடக்கூடாது - சீமான்

ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 3:36 pm
ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil seeman


கடலூர் மாவட்டம் வடலூரில், நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார்.

அதில், “ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். கருணாநிதி உடல்நிலை சரியில்லை என்றால் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அப்படி என்றால் அரசு மருத்துவமனையின் நிலை தான் என்ன?.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற அனுமதிக்காமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவர் 70 நாட்களுக்கு பதிலாக 7 நாட்களிலேயே உயிரிழந்திருப்பார்.

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம். ஒரு பைசா லஞ்சம், ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்.

நாங்கள் மயிலை சின்னமாக ஒதுக்க கோரினோம். ஆனால் மயில் தேசிய பறவை என கூறி ஒதுக்க மறுத்துவிட்டனர். ஆனால் தேசிய மலர் தாமரை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கி உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி