ஆப்நகரம்

ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 - குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து ப.சிதம்பரம் விளக்கம்!

காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 27 Mar 2019, 1:35 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச வருவாய் திட்டம் இடம்பெற்றுள்ளது.
Samayam Tamil Chidambaram


இதன்மூலம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.72,000 பெற வழிவகுக்கும். இதன்மூலம் அரசுக்கு கடன் சுமை கூடும் என்று விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

Rahul's Min Income Guarantee: அதென்ன ”குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம்” - வாங்க தெரிஞ்சுக்கலாம்!

அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி அறிவித்த திட்டம் புரட்சிகரமானது. மகாத்மா காந்தியின் கனவை நினைவாக்கும் திட்டம். இந்தியாவில் இருக்கும் ஏழைகளை முன்னேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால், 25 கோடி பேருக்கு பலன் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

இதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுத்தப்படும். ஏழைகள் யார் என்று சரியாக கண்டறியப்பட்டு, திட்டம் அமலுக்கு வரும் என்று கூறினார்.

அடுத்த செய்தி