ஆப்நகரம்

BJP Lok Sabha Manifesto: இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவிருக்கும் பாஜக தேர்தல் அறிக்கை

பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் வெளியிடுகின்றனர்.

Samayam Tamil 8 Apr 2019, 10:09 am
பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் வெளியிடுகின்றனர்.
Samayam Tamil bjp leaders modi


இதில் தேசியவாதத்தையும் வளர்ச்சியையும் முன்வைத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது உள்பட முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி, காசி மதுராவை இணைத்த ஆன்மீக சுற்றுலா வளாகமாக அமைக்கவும் திட்டம் வெளியாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு இந்த தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் பெறும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி என்ற பாஜகவின் பிரச்சார முழக்கத்தை அருண் ஜெட்லி வெளியிட்டார்.

அடுத்த செய்தி