ஆப்நகரம்

தேர்தல் முடிந்தது... செளகிதாரை நீக்கிய மோடி!

தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியான நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார்.

Samayam Tamil 23 May 2019, 7:41 pm
தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியான நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார்.
Samayam Tamil Chowkidar Modi


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற பெயருக்கு முன்னர் ‘செளகிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்தார். அவரை தொடர்ந்து மற்ற பாஜகவை சேர்ந்தவர்களும் ‘செளகிதார்’ என்ற வார்த்தையை சேர்த்தனர்.

இனி காவலாளி இல்லை:
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி விட்டு, "காவலாளி என்ற வார்த்தையின் உணர்வு இனி வேறு லெவலுக்கு செல்ல உள்ளது.

இந்தியாவுக்காக உழைப்பதில் காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்.
டுவிட்டரிலிருந்து செளகிதார் என்ற வார்த்தை நீக்கப்படலாம் ஆனால் என் உள்ளத்திலிருந்து நீக்காமல் நினைவில் வைத்துக் கொள்வேன்." என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி