ஆப்நகரம்

PMK: நீ தான் காரணம்; இல்ல நீ தான் - சண்டை போடும் பாமக; அட்டாக் பண்ணும் தேமுதிக; எதுக்கு தெரியுமா!

மக்களவை தேர்தல் தோல்வியால், பாமக மற்றும் தேமுதிக இடையே மறைமுகச் சண்டை ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 May 2019, 12:51 pm
தமிழக அரசியலில் எலியும், பூனையுமாக இருந்தவர்கள் தேமுதிக மற்றும் பாமக. அரசியல் கட்சி கூட்டங்களில் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். இவர்களை ஒன்று சேர வைத்தது 2014 மக்களவை தேர்தல். ஆனால் அன்புமணி மட்டும் வெற்றி பெற, தேமுதிக படுதோல்வி அடைந்தது.
Samayam Tamil PMK DMDK


உடனே பாமகவினர் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காததால் தான் தோற்றுவிட்டதாக தேமுதிக பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ஆனால் பாமக மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த மோதல் படிப்படியாக அமைதி நிலைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் அதிமுக உடன் பாமக மற்றும் தேமுதிக கூட்டணி வைத்தது. முதலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாமகவிற்கு 7 தொகுதிகள் கிடைத்தன. இது தேமுதிகவிற்கு பிடிக்கவில்லை.

தங்களுக்கும் 7 தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்ததால், அதிமுக - தேமுதிக கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வந்தது. ஒருவழியாக 4 தொகுதிகளை தேமுதிக பெற்றது. இதற்கிடையில் இருகட்சிகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து, சமரசம் செய்து கொண்டனர்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக - தேமுதிக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாஜக மற்றும் பாமக உடன் வைத்த கூட்டணியால், அதிமுக கூட்டணி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இது தேர்தல் முடிவுகளிலும் எதிரொலித்தது.

அதிமுக கூட்டணி போட்டியிட்டதில் ஒரு தொகுதியை தவிர, மற்றவற்றில் படுதோல்வியை சந்தித்தது. பாமகவின் அன்புமணி, தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் போன்றோரின் தோல்வி அக்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தங்கள் கட்சியின் தோல்விக்கு பாமக தான் காரணம் என்று தேமுதிகவும், தேமுதிக தான் காரணம் என்று பாமகவும் கூறத் தொடங்கியுள்ளன.

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை, பிரச்சாரங்களில் அதிக முக்கியத்துவம் தரவில்லை என்று பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர். இந்த மோதல் சமூக வலைத்தளங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது.

அடுத்த செய்தி