ஆப்நகரம்

ஓடும் ரயிலில் புதுமையான பிரசாரம் - எடுபடுமா பிரியங்கா காந்தியின் வியூகம்?

வரும் மக்களவை தேர்தலை ஒட்டி, ஓடும் ரயிலில் பயணிக்கும் மக்களிடையே புதுமையான முறையில் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 26 Mar 2019, 1:54 pm
ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. வரும் மக்களவை தேர்தலை ஒட்டி, பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil Priyanka Gandhi


தாய் சோனியா காந்தி உடன் ரேபரேலி தொகுதியில் நேற்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதேபோல் ராகுல் காந்தி உடன் அமேதி தொகுதியிலும் பிரசாரம் செய்து, அயோத்தி செல்வதாக இருந்தார்.

இந்நிலையில் மேற்கூறிய பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு டெல்லியில் இருந்து கைபியாத் எக்ஸ்பிரஸ் மூலம் பைசாபாத் செல்கிறார். அங்கு அயோத்தியின் அனுமர் கோவிலில் தரிசனம் செய்து, தன் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பைசாபாத் தொகுதியில் போட்டியிடும் நிர்மல் கத்ரிக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் செய்கிறார். இதில் கைபியாத் எக்ஸ்பிரஸ் பயணத்தில் முக்கிய விஷயம் ஒன்று அடங்கியுள்ளது. அதாவது, இந்த ரயிலில் ஆசம்கர் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளுக்கு செல்ல ஏராளமான முஸ்லீக் மக்கள் பயணிப்பர்.

அவர்களிடையே ரயிலில் பிரசாரம் செய்ய பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக வாரணாசியில் இருந்து படகின் மூலம் பிரியங்கா பிரசாரப் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி