ஆப்நகரம்

தோல்வி பயத்தில் எங்களை அச்சுறுத்தவே வருமான வரிசோதனை - கனிமொழி பேட்டி!

வருமான வரி சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Apr 2019, 10:56 pm
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இதையொட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.
Samayam Tamil Kanimozhi Press Meet


இந்நிலையில் கனிமொழி வீட்டின் மேல் தளத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வருமான வரித்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது.

இரண்டு மணி நேர சோதனைக்கு பின், வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் திமுக தொண்டர்கள் திரண்டு, மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சுமார் 8.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டனர். இரவு நேரத்தில் இந்த சோதனை நடத்த ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினேன்.

அதற்கு பதில் இல்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு கொடுத்தோம். சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடைபெற்றது. எதுவும் கிடைக்கவில்லை. சோதனை நடத்திய இடத்தில் எனக்கு சம்மன் அனுப்பினார்கள்.

இது சட்டத்திற்கு புறம்பானது. நீங்கள் யாரை விசாரிக்க வந்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அவர்கள் வேட்பாளர் என்று பதில் கூறினர். எதிர்க்கட்சி வேட்பாளர் என்பதற்காகவே என்னை சோதனையிட வந்துள்ளனர்.

திமுக மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் பயந்த கட்சி திமுக இல்லை. தேனியில் அதிமுக பிரமுகர் வீடு, தமிழிசை வீட்டில் சோதனை ஏன் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி