ஆப்நகரம்

2ஆம் கட்டத் தேர்தல் - எந்தெந்த வேட்புமனுக்கள் செல்லுபடியாகும்; தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை!

இரண்டாம் கட்ட தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது, தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை செய்கிறது.

Samayam Tamil 27 Mar 2019, 8:01 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil Election-commission


அதேநாளில் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற மற்றும் புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் அமைந்துள்ளன.

பிறகட்சிகள் தனித்தும், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

இதில் மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 1385 ஆண்கள், 171 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 508 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடக்கிறது. காலை 11 மணியளவில் பொதுத் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. அதில் விதிகளுக்கு உட்பட்டு, போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

வேட்புமனுக்கள் வாபஸ் பெற 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அடுத்த செய்தி