ஆப்நகரம்

Theni Elections 2019: ஓபிஎஸ் மகன் வெற்றியில் மோசடியா? தேனியில் பதிவான 3.5 லட்சம் வாக்குகள் மிஸ்ஸிங்!

தேனி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளில் 3.5 லட்சம் வாக்குகள் தவறிவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 May 2019, 10:18 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
Samayam Tamil Theni Candidate


தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ஒரேவொரு தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. அது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி மக்களவை தொகுதி ஆகும்.

அங்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேனி தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

இது பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்கு அதிக பணப்பட்டுவாடா, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் குறித்த தகவல் பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஆனால் அவற்றின் கூட்டு எண்ணிக்கை தவறாக இருக்கிறது. அதாவது,

தேனி மக்களவை தொகுதி:

பதிவானவை - 11,55,537 வாக்குகள்
அதிமுக - 3,65,363
காங்கிரஸ் - 3,10,823
அமமுக - 99,867
நாம் தமிழர் கட்சி - 19,784
மக்கள் நீதி மய்யம் - 11,891
-----------------------------------------
கூடுதல் - 8,07,128
------------------------------------------
மீதியுள்ள வாக்குகள் = 3,48,409

இந்த வாக்குகள் எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான கணக்கிடப்பட்ட காகிதம் மற்றும் பத்திரிகை ஒன்றில் வெளியான வாக்கு எண்ணிக்கை புகைப்படம் ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி