ஆப்நகரம்

Sonia Gandhi: மக்களவை தேர்தல் : சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மக்களவை தேர்தல் 2019 தேர்தலில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Mar 2019, 9:50 pm
புதுடெல்லி : மக்களவை தேர்தல் 2019 தேர்தலில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட 12 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil rahul gandhi


மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடும் வேலையை தொடங்கப்பட்டுள்ளது.

சோனியா, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகள்;

காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

General Elections 2019: காங்கிரஸில் தொடங்கியது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

முதல் கட்டமாக 11 உத்தரப் பிரதேச தொகுதிகள் மற்றும் குஜராத்தின் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அடுத்த செய்தி