ஆப்நகரம்

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 5:11 pm
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil high


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4, தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், வேட்புமனு செய்ய நாளை தான் கடைசி நாள் என்பதால், கனிமொழில், தமிழிசை, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றி வரும் ஏப்ரல் 1ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 21 மாவட்டங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி