ஆப்நகரம்

அதிமுக - அமமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை - அமைச்சர் செல்லூர் கே. ராஜு

அதிமுக - அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அமைச்சர் செல்லூர் கே. ராஜு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

Samayam Tamil 2 Apr 2019, 12:21 pm
அதிமுக - அமமுக இணைப்பு குறித்து அதிமுக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அமைச்சர் செல்லூர் கே. ராஜு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.
Samayam Tamil sellur raju


மதுரையில் 500 தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ தொழில் சங்கத்தில் இருந்து விலகி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "மதுரையில் சி.பி.எம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொழிலாளர்களுக்கு ஒன்றும் செய்யதவர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உயிரை இழந்த லீலாவதியை கொலை செய்தவர்களுடன் சி.பி.எம் கைகோர்த்து உள்ளது.

இதனால் லீலாவதி குடும்பம் மன வேதனை அடைந்துள்ளது, சி.பி.எம் மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்து உள்ளது, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளத்தில் ஒரு நிலைபாடு என மாநிலத்திற்கு ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என் மீது புகார் கொடுக்கிறது என்பதற்காக நான் உண்மையை சொல்ல முடியாமல் இருக்க முடியாது. அதிமுக - அமமுக இணைப்பு குறித்த தகவலை மதுரை ஆதீனம் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். தினகரன் பாவம் பரிசு பெட்டகத்தை தூக்கி இருக்கிறார். அது ஒன்றும் நடக்காது, மதுரை அதீனம் அவருடைய விருப்பத்தை தெரிவித்து உள்ளார், இணைப்பு குறித்து அதிமுக சார்பில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என தெரிவித்தார்.

அடுத்த செய்தி