ஆப்நகரம்

கொக்கு போல செயலாற்ற வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

பாமகவில் இருந்து மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார். பாமகவின் கொள்கைக்கும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் கருத்துகளுக்கும் இப்போது அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.

Samayam Tamil 10 Apr 2019, 10:02 pm
ஆளுங்கட்சியின் அதிகார அத்துமீறல்களை கண்டறிவதில் கொக்கு போல செயலாற்ற வேண்டும் வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர்கள் திமுகவினர் என பெருமையுடன் சொல்வார் கருணாநிதி பசி நோக்காமல் களைப்படையாமல் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் நம் பக்கமே - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
Samayam Tamil election234


"பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக இருக்கும்" - இம்ரான் கான்

தனிநபர் விமர்சனங்களில் அதிமுகவுக்கு நம்பிக்கையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

பாமகவில் இருந்து மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார். பாமகவின் கொள்கைக்கும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் கருத்துகளுக்கும் இப்போது அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் தொகுதியில் ஜோதிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள தடை கோரி டிடிவி தினகரன் அமமுக கட்சி வேட்பாளர் புகழேந்தி முறையீடு செய்துள்ளார்.

Tamil Nadu By Elections Live: தனிநபர் விமர்சனங்களில் அதிமுகவுக்கு நம்பிக்கையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

ரஃபேல் தொடர்பான புதிய ஆவணங்கள் அடிப்படையில விசாரணை கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு. பத்திரிகைகளில் வெளியான ரஃபேல் ஆவணங்களை கவனத்தில் கொள்ளக்கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு. ரஃபேல் தொடர்பான பாதுகாப்புத்துறையின் ஆவணங்கள் விசாரணைக்கு உகந்தவை தான் – உச்சநீதிமன்றம்.

தேர்தல் வேளையில் இது பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

சேலத்தில் 12-ஆம் தேதி நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகின்றனர். சீலநாயக்கன்பட்டி- ஆத்தூர் புறவழிச்சாலையில் 12-ஆம் தேதி பகல் 12 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Tamil Nadu Elections Survey Results : நடிகர், நடிகைகளின் பிரச்சாரம் மாற்றத்தை ஏற்படுத்துமா? இதோ சமயம் வாசகர்கள் கருத்து!!

திண்டுக்கல் மக்களவை தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் சுதாகரன் கொடைக்கானலில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அன்றாட தேவைகள் வீட்டிற்கே வந்துசேரும் எனவும் உறுதி என்றார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மக்கள் நீதிமைய வேட்பாளர் சுதாகரன் இன்று கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களுக்கு தேவையான துறை சார்ந்த அடிப்படை அன்றாட தேவைகள் அனைத்தும் வீட்டிற்கே வந்து சேரும் எனவும் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது தங்களின் முக்கிய தேர்தல் அறிக்கை எனவும், கொடைக்கானலுக்கும் பழனிக்கும் சுவிட்சர்லாந்தில் உள்ளது போல் அதிநவீன ரோப்வே அமைக்கப்படும் எனவும், திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து நாடு படுகுழிக்கு போகவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

தங்களது சின்னமான டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் வெற்றி தங்களுக்கு நிச்சயம் எனவும் வித்தியாசம் தான் லட்சியம் என்ற பஞ் டயலாக்கோடு தொடங்கினார்.

அனைத்து துறைகளில் உள்ள குறைகளை களைவதுதான் தங்களின் வேலை என்றும் இந்த பகுதியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவோம் என்றும் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு நவீன ரோப் கார் அமைக்கப்படும் தண்ணீர் பிரச்னைகள் மற்றும் மரம் வெட்டுவது முழுவதும் தடுக்கப்படும் மேலும் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதே தங்களின் குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி