ஆப்நகரம்

ஜனநாயகம்-பணநாயகம் மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வி - கே.எஸ்.அழகிரி

’இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது. ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்கும் ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது என கே.எஸ். அழகிரி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

Samayam Tamil 16 Apr 2019, 1:14 pm
’இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது. ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற்கும் ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது.
Samayam Tamil KSALAGIRI


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் 6000 ரூபாய் கொடுப்போம் என்று கூறி இருக்கிறோம்’ என கே.எஸ். அழகிரி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

காங்கிரஸின் அனைத்து திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

பாரதிய ஜனதா அஞ்சுகிறது. தமிழக முதல்வர் அவர்கள் இந்தியா மோடியின் கையில் பத்திரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மோடியின் கையில் பத்திரமாக உள்ளார்.

காவலாளியின் கையில் களவாணி இருக்கிறார்
என்று கூறினார்.

நீட் தேர்வு மாநிலங்களுக்கு தேவை என்றால் வைத்துக்கொள்வோம் தேவை இல்லை என்றால் எடுத்து விடுவோம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். நீட் தேர்வினால் கோடான கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா இது சம்பந்தமாக எதுவும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை

8 வழி சாலை திட்டம் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை வெளிநாடுகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் 8 வழி சாலை வரைவு திட்டங்களை ஓராண்டு காலங்கள் எடுக்கிறார்கள்

.ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் அவசர அவசரமாக எடுத்து செயல்படுத்துகிறார்கள். நீதிமன்றங்கள் நிளம் கையகப்படுத்துவது தொடர்பாக தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

பாரதிய ஜனதா அதிமுக எந்த ஒரு கொள்கையும் அடிப்படையிலும் இணை சேரவில்லை. அவசர அவசரமாக கூட்டப்பட்ட கூட்டம் ஆகும்

. அனைத்து தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்’ என்றார் மதுரை விமான நிலையத்தில் பேட்டி

யளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி.

அடுத்த செய்தி