ஆப்நகரம்

தர்மபுரியில் ரூ. 5 கோடி பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தர்மபுரி நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 5 கோடி பணத்தை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Apr 2019, 10:27 pm
சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட கட்டுக்கட்டாக ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தர்மபுரியில் ரூ. 5 கோடி பறிமுதல்
தர்மபுரியில் ரூ. 5 கோடி பறிமுதல்


தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சேசம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வங்கிகளுக்கு பணம் எடுத்து செல்லும் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் .

சோதனையில் 5 கோடி ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த பணம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் (ஆக்சிஸ் பேங்க்)வங்கிகளுக்கு கொண்டு செல்வது என ஊழியர்கள் கூறினார்கள்.

ஆனாலும் அவர்களிடம் அதற்குரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 5 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே சமயத்தில் இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். கடந்த சில தினங்உளுக்கு முன்பு 3.47 கோடி ரூபாய் அரூரில் அரசு பேருந்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி