ஆப்நகரம்

தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல், துப்பாக்கிச் சூடு; தமிழகத்தில் பரபரப்பு

ஆண்டிபட்டி அமமுக கட்சி ஒன்றிய அலுவலகத்திலம், தனியார் வணிக வளாகத்திலும் வருமான வரிதுறை அதிகாரிகள் 9 மணி நேரமாக நடத்திய சோதனை முடிவடைந்தது. பணம் பதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்கட்சி உறுப்பினர் ஜெயகுமார் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

Samayam Tamil 17 Apr 2019, 10:12 am
ஆண்டிபட்டி அமமுக கட்சி ஒன்றிய அலுவலகத்திலம், தனியார் வணிக வளாகத்திலும் வருமான வரிதுறை அதிகாரிகள் 9 மணி நேரமாக நடத்திய சோதனை முடிவடைந்தது. பணம் பதுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அக்கட்சி உறுப்பினர் ஜெயகுமார் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.
Samayam Tamil money


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி அமமுக கட்சியினர் தங்களது ஒன்றிய அலுவலகத்தில் வைத்து அக்கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்காக பணப் பட்டுவாடா செய்ததாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்தனர். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயகுமார் இக்குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.

மாவட்ட வருமான வரித் துறையினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் பறக்கும் படையினர் ஆண்டிபட்டிக்கு வருகை தந்து அமமுக ஒன்றிய கட்சி அலுவலகம், அந்த அலுவலகம் அமைந்துள்ள வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பிளாஸ்டிக் பை, கவர்களில் பதுக்கி வைத்திருந்த பணங்களையும் பல்வேறு ஆவணங்களை கைப்பறியதோடு, தீவிர சோதனையும் மேற்கொண்டனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் நடத்தபட்ட சோதனை இன்று காலை 5 மணி வரை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் வரை நடைபெற்ற சோதனையில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை தேனி மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

ஏற்கனவே முதற்கட்ட சோதனை நடத்த வந்த தேர்தல் பறக்கும் படையினரையும், வருமானவரிதுறையினரையும் அமமுக கட்சியினர் சண்டையிட்டு பணத்தை அள்ளி செல்ல முயன்றபோது தற்காப்புக்காக போலீசார் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

நாளை வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றபட்ட சம்பவமும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ஆண்டிபட்டி தொகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி