ஆப்நகரம்

அரசியல் கட்சிகள் மும்முரம்; இறுதி கட்டத்தில் வேட்புமனு தாக்கல் - தமிழகம், புதுவையில் நாளை கடைசி!

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

Samayam Tamil 25 Mar 2019, 7:51 am
மே 23, வியாழன்: இந்த நாளை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசிற்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் தீர்ப்பு வழங்குகின்றனர். அதாவது மக்களவை தேர்தல் 2019ன் முடிவுகள் மே 23ல் அறிவிக்கப்பட உள்ளன.
Samayam Tamil Election-commission


வரும் ஏப்ரல் 11ல் தொடங்கும் தேர்தல், 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இத்துடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகின்றன.

இவற்றின் முடிவுகளும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து மே 23ல் வெளியாகிறது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களின் 97 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வரும் ஏப்ரaல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதேநாளில் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாகவுள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை(மார்ச் 26) கடைசி நாள் ஆகும்.

முதல் 3 நாட்கள் மனுதாக்கல் மந்தமாக இருந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கடந்த 22ஆம் தேதி, அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்தனர்.

எனவே இன்றும், நாளையும் ஏராளமானோர் மனுதாக்கல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுக்கள் மீது 27ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வாபஸ் பெற 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

அடுத்த செய்தி