ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் 285 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; ஏற்பாடுகள் தீவிரம் - ஆட்சியர் பிரபாகர்!

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் 108 இடங்களில் 285 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், தேர்தலை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது எனவும் ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 3:43 pm
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனை முறையாக கடைபிடிக்க பறக்கும் படையினர், நிலையான கன்காணிப்பு குழு உள்ளிட்டவை தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்படி அமைக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil total 285 election booths are sensitive says krishnagiri collector prabhakar
கிருஷ்ணகிரியில் 285 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; ஏற்பாடுகள் தீவிரம் - ஆட்சியர் பிரபாகர்!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதால் ஒவ்வொரு தொகுதிக்கும், 24 மணி நேரமும் கண்காணிக்க தனியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 42 குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான வாகனம், ஜி.பி.எஸ் வசதி, காவல்துறை, வீடியோ குழு என அனைத்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் தேர்தலை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் வந்துள்ளன. அவற்றைத் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. தேர்தலை நடத்த 9,000 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களும் தயார் செய்யப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் 1,885 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றை தயார் செய்யவும், வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில், 108 இடங்களில் 285 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலை சுமூகமாக நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி