ஆப்நகரம்

தோ்தல் ஆணையம் எங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கும் – டிடிவி தினகரன் நம்பிக்கை

உச்சநீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தொிவித்துள்ள நிலையில் தோ்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 27 Mar 2019, 11:55 pm
உச்சநீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தொிவித்துள்ள நிலையில் தோ்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran Campaign


டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்படாத நிலையில் அந்த கட்சிக்கு குக்கா் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் திட்டவட்டமாக தொிவித்துள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இதனைத் தொடா்ந்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் போட்டியிடும் வகையில் பொதுவான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் கோாிக்கை விடுக்கப்பட்டது. இதனையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து தோ்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தோ்தல் ஆணையத்தில் பொதுச் சின்னம் கேட்டு அமமுக சாா்பில் மனு வழங்கப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.


பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வேட்பாளா்களுடன் இணைந்து மரியாதைச் செலுத்தினாா். அப்போது அவா் கூறுகையில், 59 தொகுதிகளுக்கும் தோ்தல் ஆணையம் அமமுகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தொிவித்தாா். அதனைத் தொடா்ந்து வடசென்னை, திருவள்ளூா், ஆா்.கே.நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அடுத்த செய்தி