ஆப்நகரம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு தேர்தலில் வாய்ப்பு; வெல்வார்களா மீண்டும் இவர்கள்!

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு அமமுக வாய்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2019, 12:51 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil AMMK


இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சி உடன் இணைந்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் அமமுக கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்:

* பூவிருந்தவல்லி - ஏழுமலை
* பெரம்பூர் - வெற்றிவேல்
* திருப்போரூர் - கோதண்டபானி
* குடியாத்தம்(தனி) - ஜெயந்தி பத்மநாபன்
* ஆம்பூர் - பாலசுப்பிரமணி
* அரூர்(தனி) - முருகன்
* மானாமதுரை(தனி) - மாரியப்பன் கென்னடி
* சாத்தூர் - சுப்ரமணியன்
* பரமக்குடி(தனி) - முத்தையா

மேற்கூறிய 9 பேரும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம், எந்தளவிற்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்வார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி