ஆப்நகரம்

Udhaya Suriyan: உதய சூரியன் சின்னத்தில் விசிக வேட்பாளர் போட்டி - ஏன் தெரியுமா?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

Samayam Tamil 17 Mar 2019, 12:33 pm
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
Samayam Tamil VCK


ஏப்ரல் 18ம் தேதி நடைப்பெற உள்ள மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இந்த திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெற்றுள்ளது.

விசிக.,வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தொல். திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்?
சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல்.திருமாவளவன் தனிச் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் திமுக.,வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவார் என அறிவித்தார்.

Lok Sabha Elections: மக்களவை தேர்தலில் அதிமுக - திமுக நேரடியாக மோதும் தொகுதிகள்!


திருமாவளவன் பேசும் போது, “விசிக.,வுக்கு ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் தனி சின்னத்திலும், ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளோம்.


Lok Sabha Elections: திமுக - பாமக நேரடியாக மோதும் தொகுதிகள் இவை தான் - சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல்!

இது கூட்டணி நட்பு மட்டுமல்லாமல், கட்சியின் ராஜதாந்திரமாக பார்க்கலாம் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி