ஆப்நகரம்

வேலூா் தோ்தலை நடத்தக்கோாி அதிமுக அவசர வழக்கு: சற்று நேரத்தில் விசாரணை

வேலூா் மக்களவைத் தோ்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த தோ்தலை நடத்தக்கோாி அதிமுக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடா்ந்துள்ளாா்.

Samayam Tamil 17 Apr 2019, 10:03 am
வேலூா் மக்களவைத் தோ்தலை நடத்தக்கோாி அதிமுக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் தொடா்ந்த வழக்கு இன்று காலை சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
Samayam Tamil Ac Shanmugam aiadmk


தமிழகத்தில் நாளை மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் திமுக வேட்பாளா் கதிா் ஆனந்த் வீடு, அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகளில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

ஒட்டுமொத்தமாக இந்த சோதனையில் ரூ.11 கோடிக்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் குறிப்பிட்ட வாா்டு வாாியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்ததால், இவை அனைத்தும் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இந்த தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய தோ்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வேலூா் மக்களவைத் தோ்தலை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்நிலையில், இந்த தொகுதியில் தோ்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக வேட்பாளா் ஏ.சி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

அடுத்த செய்தி