ஆப்நகரம்

வேலூர் தேர்தல்: 3 நாள் சூறாவளி பிரசாரம் செய்கிறார் முதல்வர்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி வருகின்ற 27ம் தேதி முதல் 3 நாட்கள் பிரசாம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 5:11 pm
வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி மூன்று நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Palaniswami Campaign.


வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

Also Read: தமிழில் பேசி ராஜ்ய சபாவில் கெத்தாக பதவியேற்ற 6 தமிழக எம்.பிக்கள்!

ஏற்கனவே நடைபெற்ற 38 தொகுதிகளுக்களுக்கான தேர்தலில் 37 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று வேலூரிலும் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று உத்வேகத்தில் திமுக போட்டியிடுகிறது. இதே போன்று அதிமுகவில், ஏற்கனவே 37 தொகுதிகளில் தோல்வியுற்றதால் வேலூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது.

Also Read: ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்கப்பட்டார் நளினி

வேலூரில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், வருகின்ற 27ம் தேதி முதல் முதல்வர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி 27ம் தேதி வானியம்பாடி, ஆம்பூர் பகுதிகளிலும், 28ம் தேதி குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளிலும் பரப்புரை செய்கிறார். அதே போன்று ஆகஸ்ட் 2ம் தேதி அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

முதல்வர் பிரசாரத்தைத் தொடங்கும் அதே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி