ஆப்நகரம்

வாக்களித்தால் தள்ளுபடி விலையில் சிக்கன் சாப்பிடலாம்!

இந்திய குடிமகனும் வாக்கின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காக தன் ஒரு நாள் லாபத்தை தியாகம் செய்துள்ளார் மகேஷ். அவரது இந்த வித்யாசமான முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது.

Samayam Tamil 11 Apr 2019, 11:33 am
சென்னை அயனாவரத்தில் சிக்கன், மட்டன் கடை வைத்துள்ளார் மகேஷ். இவர் வரும் 18ம் தேதி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு கிலோவுக்கு 50 ரூபாய் தள்ளுபடி விலையில் ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்படும். அதனை காண்பித்து இச்சலுகையை பெறலாம் என மகேஷ் போஸ்டரில் அறிவித்துள்ளார்.
Samayam Tamil Capture


நடிகர்களை வைத்து வீடியோ வெளியிட்டு வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றும்படி தேர்தல் ஆணையம் விளம்பரங்கள் செய்து வருகிறது. வாக்களிக்க சோம்பல் பட்டு பலர் இன்று வாக்களிப்பதில்லை. சில தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிப்பதில்லை. இதனால் பலர் வாக்கு செலுத்தாமல் இருக்கின்றனர்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்கின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காக தன் ஒரு நாள் லாபத்தை தியாகம் செய்துள்ளார் மகேஷ். அவரது இந்த வித்யாசமான முயற்சி சமூக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது.

அடுத்த செய்தி