ஆப்நகரம்

காங்கிரஸுக்கு டிரைவர் சீட் இல்லை - கேசிஆர்; கூட்டணி கட்சிகளின் மனநிலை என்ன?

மூன்றாம் அணி அமைய இந்தியாவின் முக்கிய மாநில கட்சிகளை ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். ஒருவேளை மூன்றாவது அணி அமைந்தாலும்கூட அதனை ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த முடியுமா என கேள்வி எழுகிறது.

Samayam Tamil 14 May 2019, 7:41 pm
மூன்றாம் அணி அமைய இந்தியாவின் முக்கிய மாநில கட்சிகளை ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ்.
Samayam Tamil file75c0uxjshkwi0ra91g8-1557762785


காங்கிரஸ் கட்சிக்கு இடம் தருவோம் ஆனால் மாநில கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்போம். டிரைவர் சீட்டை தரமாட்டோம் என முன்னதாக கேசிஆர் கட்சி செய்தித் தொடர்பாளர் அப்துல் கான் தெரிவித்து இருந்தார். இதுவே கேசிஆரின் கருத்தாகவும் இருந்தது.

பாஜகவின் ஆதரவு எங்களுக்குத் தேவை இல்லை. நாங்களும் ஆதரவு அளிக்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கேசிஆர். தற்போது துரை முருகன் சந்திர பாபு நாயுடுவை சந்தித்துள்ளார். இவரது இந்த சந்திப்பு கேசிஆர் கட்சியில் பலத்த கேள்வியை எழுப்பியுள்ளது.

ஒருவேளை மூன்றாவது அணி அமைந்தாலும்கூட அதனை ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த முடியுமா என கேள்வி எழுகிறது.

எது எப்படி இருந்தாலும் காங்கிரஸுக்கு கேசிஆர் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது மாநில கட்சிகளுக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே உள்ளது. தீர்ப்பு மக்கள் கையில்!

அடுத்த செய்தி