ஆப்நகரம்

Lok Sabha Elections: வேலூரில் நிறைவுற்றது தேர்தல் பரப்புரை: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

வேலூர் மக்களவை தொகுதிக்கான் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவுற்றுள்ளது.

Samayam Tamil 3 Aug 2019, 6:36 pm
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு, வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களமிறங்கிய அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
Samayam Tamil MK


அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். இதே போன்று துணை முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்கள் பலரும் வாக்கு சேகரித்தனர். இதே போன்று திமுக வேட்பாலர் கதிர் ஆனந்திற்கு ஆதரவு திரட்டி அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் வாக்கு சேகரித்தார். இந்த நிலையி, இன்று மாலை 6 மணியுடன் வேலூரி தேர்தல் பரப்புரை நிறைவுற்றுள்ளது.

Also Read: வேலூர் தேர்தல்: 3 நாள் சூறாவளி பிரசாரம் செய்கிறார் முதல்வர்

வேலூரில் பரப்புரை முடிந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி தனியார்சேனலுக்கு அளித்த பேட்டியில், மக்களின் ஆதரவு எப்போதும் அதிமுகவிற்கு தான். தமக்கு தான் வெற்றி வெற்றி என்று கூறி முக ஸ்டாலின் திமுக தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்று தொண்டர்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Also Read: வெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200க்கும் மேற்பட்டோர் இணைப்பு

அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பாஜக தலைவர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

Also Read: வேலூர் தேர்தல்: திண்ணை பிரசாரம் மூலம் வாக்காளர்களை கவரும் ஸ்டாலின்



அடுத்த செய்தி