ஆப்நகரம்

ஒர்க் அவுட் ஆகுமா தலைவர்களின் ’செல்ஃபி’ தேர்தல் யுக்தி?

இன்றைய நவநாகரிக யுகத்தில் சர்வம் செல்ஃபிமயம் தான். ஷாப்பிங் மால், திரை அரங்கு, பூங்கா, கடற்கரை என எங்கும் இளசுகள் செல்ஃபி மழை பொழிந்து சமூக வலைதளங்களில் உடனடியாக பதிவேற்றுகின்றனர்.

Samayam Tamil 28 Mar 2019, 5:58 pm
இன்றைய நவநாகரிக யுகத்தில் சர்வம் செல்ஃபிமயம் தான். ஷாப்பிங் மால், திரை அரங்கு, பூங்கா, கடற்கரை என எங்கும் இளசுகள் செல்ஃபி மழை பொழிந்து சமூக வலைதளங்களில் உடனடியாக பதிவேற்றுகின்றனர்.
Samayam Tamil stalin


இது செலிஃபிரிட்டிக்கள் சிலருக்கு சோதனையாக உள்ளதால் தட்டி விட்டு எதிர்ப்பை காட்டினாலும் செல்ஃபியை விரும்பி எடுத்துக்கொள்ளும் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களும் இருக்கவே செய்கின்றனர்.

தமிழக அரசியல்வாதிகள் ஒருபடி மேலே சென்று செஃல்பி எடுத்துக்கொள்வதை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே எண்ணத் தொடங்கி அதில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக ஸ்டாலின் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். குரூப் செல்ஃபி முதல் தனியாக எடுத்துக்கொள்ளும் செல்ஃபி வரை ஸ்டாலினின் தாராள மனது வாக்காளர்களுக்கு அதீத உரிமை அளிக்க வல்லது.

ரஜினி உள்ளிட்ட சிலர் கட்சித் தொண்டர்களின் செல்ஃபியை விரும்பாவிட்டாலும் பெரும்பாலான தலைவர்கள் செல்ஃபிக்கு நோ சொல்வதில்லை. விஷயத்துக்கு வருவோம். உண்மையில் இதுபோன்ற கனிவான செயல்கள் வாக்கை பெற்றுத்தருமா என்ற கேள்விக்கு நேரடி பதில் இல்லை. தரலாம் அல்லது தராமலும் போகலாம்.

ஆனால் அதீத செல்வாக்குடைய நபர் எவ்வளவு இயல்பாகப் பழகுகிறார் என்ற பிம்பத்தை கட்டாயம் உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒபாமா, மோடி, ஜஸ்டின் ட்ரூடோ, கொலிண்டா கிரப்பார் கிதரோவிச் உள்ளிட்ட செல்ஃபியை விரும்பும் உலக தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பினை பெறத் தவறுவதில்லை.

உலகத் தலைவர்களின் இந்த ஃபார்முலாவை நாளைய உலகத் தலைவர்களாகத் துடிக்கும் அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் (!) உள்ளிட்ட தலைவர்கள் பின்பற்றுவதில் ஆச்சரியமென்ன?

அடுத்த செய்தி