ஆப்நகரம்

ஜாதி பிரிவு, வேலை வாய்ப்பின்மை, வறட்சி; தவிக்கும் அரக்கோணத்தை காப்பார்களா அரசியல்வாதிகள்?

அரக்கோணம் மக்களவை தொகுதியில் முன்னாள் யூனியன் அமைச்சர் ஜகத் ரட்சகன் திமுக சார்பாகவும் ஏ.கே.மூர்த்தி (பாமக) அதிமுக கூட்டணி சார்பாகவும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் என்னென்ன என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

Samayam Tamil 4 Apr 2019, 1:14 pm
அரக்கோணம் மக்களவை தொகுதியில் முன்னாள் யூனியன் அமைச்சர் ஜகத் ரட்சகன் திமுக சார்பாகவும் ஏ.கே.மூர்த்தி (பாமக) அதிமுக கூட்டணி சார்பாகவும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் என்னென்ன என ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
Samayam Tamil 58214012


அரக்கோணம் அதிகம் வளர்ச்சி அடையாத தமிழக மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
அரக்கோணத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று வேலை வாய்ப்பு இன்மை. முன்னதாக இங்கு தமிழ்நாடு இரும்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திறக்கப்பட்டது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என நினைத்த வேளையில் சில பிரச்னைகள் காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டது என்கிறார் ஒரு அரக்கோணம் பகுத்யைச் சேர்ந்த நபர். இதனால் அங்குள்ள படித்த இளைஞர்கள் பெங்களூருக்கும், சென்னைக்கும் வேலை தேடிச் செல்கின்றனர்.

அங்கு உள்ள விவசாய நிலங்கள் வறட்சி காரணமாக அதிகம் பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் நிலங்களை விற்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. பருவ மழை பொய்ப்பதாலும் சரியான பாசன வசதி இல்லாததாலும் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது. ஆனால் விவசாயத்தையே நம்பியுள்ள தொகுதி அரக்கோணம். விவசாயிகள் விவசாயம் செய்வதாலேயே இங்கு பலரும் தொழில் நடத்தி பிழைக்கின்றனர்.

வன்னியர்கள் அதிகமாக உள்ள பகுதி இது. இதனை குறிவைத்தே பாமக இந்த தொகுதியை கேட்டு வாங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் தலித்கள் உள்ளனர். இவர்கள் தவிர இஸ்லாமியர்கள், முதலியார் ஆகியோர் இங்கு அதிகம் உள்ளனர். இங்கு அவ்வப்போது ஜாதி கலவரங்கள் நடக்காமல் இல்லை.

1479961 வாக்காளர்கள் இத்தொகுதியில் உள்ளனர். இதில் 724688 ஆண்களும் 755199 பெண்களும் உள்ளனர். ஆண்களைக்காட்டிலும் பெண்கள் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள தொகுதி என்பதால் பெண்களுக்கான பல திட்டங்களை திமுக, பாமக வேட்பாளர்கள் செயல்படுத்துவோம் என உறுதி அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்