ஆப்நகரம்

பேஸ்புக் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்புங்கள்!

பேஸ்புக் நிறுவனம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு எனத் தொடரும் விடுமுறைக் காலத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Gadgets Now 22 Dec 2016, 2:46 pm
பேஸ்புக் நிறுவனம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு எனத் தொடரும் விடுமுறைக் காலத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil facebook rolls out holiday cards and other exciting features
பேஸ்புக் மூலம் வாழ்த்து அட்டைகள் அனுப்புங்கள்!


பேஸ்புக் நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு பல புதிய அப்டேட்களை அளித்து வருகிறது. பேஸ்புக் மெசென்ஜரில் க்ரூப் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தி லாக் இன் செய்யும் வசதி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது பேஸ்புக். மேலும், பதிவுகளின் பின்னணி நிறத்தை மாற்றுவது, ஆடியோ ஸ்ட்ஃரீமிங் செய்வது ஆகியவற்றை இணைக்கவும் சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு விடுமுறைக்கால வாழ்த்து அட்டைகள் அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நியூஸ் ஃபீட் பக்கத்தின் மேல் பகுதியில் விடுமுறைக்கால வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வசதி இருக்கும். 18 விதமான மாறுபட்ட டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் உள்ள அவற்றை உங்கள் விரும்பத்திற்குரிய நபர்களுக்கு அனுப்பி வாழ்த்து தெரிவிக்கலாம்.

இத்துடன், ட்ரெண்டாகும் விஷயங்கள் பற்றிய தகவலும் நியூஸ் ஃபீட் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் அதை க்ளிக் செய்து ட்ரெண்ட் ஆகும் விஷயங்களைப் பகிரவோ, அதுபற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவோ செய்யலாம்.

அடுத்த செய்தி