ஆப்நகரம்

சவுண்ட் க்ளவுடுக்கு போட்டியாக பேஸ்புக்?

பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையை நடத்தி வருகிறது.

Gadgets Now 21 Dec 2016, 7:03 pm
பேஸ்புக் நிறுவனம் புதிதாக ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையை நடத்தி வருகிறது.
Samayam Tamil facebook starts testing live audio streaming option
சவுண்ட் க்ளவுடுக்கு போட்டியாக பேஸ்புக்?


பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் புதிதாக ஆடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் வசதியை இணைப்பதற்கு அந்நிறுவனம் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே உள்ள வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சத்திற்கு மாற்றாக ஆடியோ ஸ்ட்ரீமிங் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில், புத்தாண்டு பரிசாக பேஸ்புக் மெசென்ஜரில் க்ரூப் வீடியோ அழைப்பு செய்யும் வசதியை அறிமுகம் செய்த பேஸ்புக் மேலும் பல்வேறு புதிய அப்டேட்கள் செய்ய சோதனை நடத்தி வருகிறது. பதிவுகளின் பின்னணி நிறத்தை மாற்றும் வசதியும் விரைவில் வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆடியோ ஸ்ட்ரீமிங் அம்சம் அறிமுகமாகும் பட்சத்தில் பிரபல ஆடியோ ஸ்ட்ரீமிங் சமூக வலைத்தளங்களான சவுண்ட் க்ளவுட் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி