ஆப்நகரம்

என்ன அவசரமோ? பட்ஜெட்டை வேக வேகமாக படித்த நிதியமைச்சர்

பட்ஜெட் உரையின் போது வேகவேகமாக படித்து உறுப்பினர்களை சிரிக்க வைத்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார்.

TNN 16 Mar 2017, 1:11 pm
தமிழகத்தின் 2017-2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதன் முறையாக இன்று மாநில நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார் சமர்ப்பித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின் அவரது ஆட்சியில் சமர்பிக்கப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
Samayam Tamil finance minister jayakumar goes full speed reading tamilnadu budget
என்ன அவசரமோ? பட்ஜெட்டை வேக வேகமாக படித்த நிதியமைச்சர்


சபாநாயகர் தனபால் பட்ஜெட் தாக்கலை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் ஜெயகுமார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழை பாடி பாடி பட்ஜெட் உரையை தொடங்கினார். முக்கிய அம்சங்களை தொடர்ந்து தெரிவித்தவாறு பட்ஜெட்டை படித்த நிதியமைச்சர் என்ன அவசரம் வந்ததோ திடீரென்று வேகவேகமாக படிக்கத்தொடங்கி விட்டார்.
And when d TN Finance minister goes full speed in reading d budget 😳🙏.... seems like he wants to rush 4 lunch #TNBudget #Jayakumar — Sharon Supriya (@SharonSupriya) March 16,2017 அப்போது சிறிது நேரம் உறுப்பினர்களிடம் பட்ஜெட்டை வேகமாக படிக்கவா? மெதுவாக படிக்கவா என்றும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட உறுப்பினர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டனர். அவருகும் சிரித்துக்கொண்டார். பின்னர் தொடர்ந்து வேகத்தைக் கூட்டியவாறு பட்ஜெட்டை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன அவசரமோ பட்ஜெட்டை வேகவேகமாக படித்த ஜெயக்குமார்#TNBudget2017 #Jayakumar #TNBudget #Budget2017 #FinanceMinister #TamilnaduBudget pic.twitter.com/RuaOwAlQ5D — Samayam Tamil (@SamayamTamil) March 16,2017 Finance minister jayakumar goes full speed reading tamilnadu budget.

அடுத்த செய்தி

டிரெண்டிங்