ஆப்நகரம்

பொதுக் கழிப்பிடம் எங்கே? கூகுள் மேப் மூலம் அறியலாம்

கூகுள் மேப் மூலம் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNN 22 Dec 2016, 7:10 pm
கூகுள் மேப் மூலம் அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil google maps will now help you find nearest public toilets
பொதுக் கழிப்பிடம் எங்கே? கூகுள் மேப் மூலம் அறியலாம்


கூகுள் நிறுவனம் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பொதுக்கழிப்பிடங்கள் உள்ள இடங்களை கூகுள் மேப் மூலம் காட்டும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சத்தின் உதவியுடன் டெல்லி, காசியாபாத், குர்காம், நொய்டா, ஃபரிதாபாத், போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் உள் பொதுக்கழிப்பிடங்களின் அமைவிடம் குறித்த விவரத்தை கூகுள் நிறுவனம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டு பொதுக்கழிப்பிடங்களை கூகுள் மேப்பில் காட்டும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் கணிணியில் கூகுள் மேப்பில் இந்த வசதி இன்று (டிச, 22) முதல் கிடைக்கிறது. இந்த சேவை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் அளிக்கப்படுவது குறிப்படத்தக்கது.

அடுத்த செய்தி