ஆப்நகரம்

தமிழ் மொழியில் கூகுள் குறல் தேடல் அசத்தும் அறிவிப்பு

கூகுளின் குரல் தேடல் செயலியில் இனி தமிழ் மொழியும் இணைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது . மேலும் இதில் 8 மொழிகளும் இணைக்கப்பட உள்ளது .

TNN 15 Aug 2017, 7:01 pm
கூகுளின் குரல் தேடல் செயலியில் இனி தமிழ் மொழியும் இணைக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது . மேலும் இதில் 8 மொழிகளும் இணைக்கப்பட உள்ளது .
Samayam Tamil google voice search is now in tamil
தமிழ் மொழியில் கூகுள் குறல் தேடல் அசத்தும் அறிவிப்பு


இன்றைய இளைஞர்கள் விரல்களால் டைப்பிங் செய்வதைக்காட்டிலும் குரல் மூலம் தங்களின் தேடல்களை செய்கிறார்கள் . டைப்பிங் செய்வதைக்காட்டிலும் குரல்வழி தேடல் 3 மடங்கு வேகமாக நிகழ்வதாக கூகுள் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் குரல் வழி தேடல் செயலியில் மாநில மொழிகளும் இடம் பெறும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது .


இணையதளத்தில் ஏதேனும் ஒரு தகவலை தேட வேண்டுமென்றால் எழுத்து வடிவிலோ அல்லது குரல்வழியிலோ கூகுள் சர்ச்சு மூலம் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை சேர்த்துள்ளது.

இந்த அறிவிப்பு அதிக மக்களின் வரவேற்ப்பை பேற்றுள்ளது.

google voice search is now in tamil

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்