ஆப்நகரம்

நீங்கள் ஜியோ பயன்படுத்துபவரா? அப்போ இது உங்களுக்காக தான்!

நீங்கள் ஜியோ பயன்படுத்துபவரா? அப்போ இது உங்களுக்காக தான்!

TOI Contributor 25 Mar 2017, 7:13 pm
ரிலையன்ஸ் ஜியோ தனது இலவசங்களுக்கு வருகின்ற 31ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கிறது. ஏப்ரல் 1 முதல் எல்லாவற்றிற்கும் கட்டணம். அதனால் ஜியோ உபயோகிப்பவர்கள் அதன் கட்டணம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். இலவசமாக டேட்டா கிடைத்தால் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவுக்கு மேல் பயன்படுத்தி பழகி இருப்போம் என்பதால், ஜியோ வழங்கும் 28 நாள் டேட்டா பாதியிலேயே தீர்ந்து போக வாய்ப்பு உள்ளது. அப்படி தீர்ந்து போகும் பட்சத்தில் இடையே ரீசார்ஜ் செய்ய, 1 ஜிபி 51 ரூபாய், 2 ஜிபி 91 ரூபாய், 5 ஜிபி 201 ரூபாய் மற்றும் 10 ஜிபி 301 ரூபாய் செலவு செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவும்.
Samayam Tamil guidance for jio prime users
நீங்கள் ஜியோ பயன்படுத்துபவரா? அப்போ இது உங்களுக்காக தான்!


ஜியோ பயனாளர்கள் அதிகாலை 2 மணிமுதல் 5 மணிவரை இலவசமான 4ஜி டேட்டாவை பெற முடியும். இது உங்களின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ஜியோ ப்ரைம் திட்டத்திற்கு வருடம் 99 ரூபாய் கட்ட வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அதே போல் மாதம் 303 ரூபாய் கட்டணம் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஜியோ சேவையில் மாணவர்கள் கூடுதலாக 25 சதவீதம் கூடுதல் டேட்டாவை பயன்படுத்த முடியும். சரியான அடையாள அட்டை வழங்கி இந்த சேவையை பெறலாம்.

ஜியோ ப்ரைம் சேவையில் இணைய மார்ச் 31, 2017 தான் கடைசி நாள். உங்கள் ஃபோனில் உள்ள மைஜியோ அல்லது ஜியோ இணையதளம் மூலமாக ஜியோ ப்ரைமை ஆக்டிவேட் செய்யலாம். இதிலிருந்தே ஜியோ நெட்வொர்க் உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி