ஆப்நகரம்

காவிரி பிரச்னை: கருணாநிதி மீது ஜெ., சரமாரி குற்றச்சாட்டு

காவிரி பிரச்னையை ஒரு பொருட்டாகவே கருணாநிதி கருதவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சரமாரியாக குற்றம் சாட்டினார்.

TNN 8 May 2016, 6:24 pm
தஞ்சாவூர்: காவிரி பிரச்னையை ஒரு பொருட்டாகவே கருணாநிதி கருதவில்லை என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சரமாரியாக குற்றம் சாட்டினார்.
Samayam Tamil jaya alleges karunanidhi for cauvery issue
காவிரி பிரச்னை: கருணாநிதி மீது ஜெ., சரமாரி குற்றச்சாட்டு


தஞ்சாவூர் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது: காவிரி பிரச்னையை திமுக கண்டுகொள்ளவில்லை. காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக மக்களை வஞ்சித்தவர் தான் கருணாநிதி. காவிரி பிரச்னையை ஒரு பொருட்டாகவே கருணாநிதி கருதவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றத்தில் உத்தரவை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டேன். அதன்படி, மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை வெளியானது. காவேரி மேலாண்மை வாரியம், நடுவர் மன்ற குழு அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏதமிழகத்தில் நீராதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2-ஆம் பசுமை புரட்சி ஏற்பட்டு விவசாய வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டங்களுக்கு வித்திட்டவர் திமுக-வின் டிஆர் பாலு தான். முந்தைய திமுக ஆட்சியின் போது தான் மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.

திமுக மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய ஜெயலலிதா, அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கி பிரசாரம் மேற்கொண்டார்.

அடுத்த செய்தி